பேரூராட்சிக்கு சொந்தமான சுவரை அனுமதியின்றி இடித்ததாகப் புகார்
கோவை, அக். 17- கோவை, இருகூர் பேரூராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதாக வாலிபர் சங்க சூலூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.குருசாமி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகாரளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது, இருசூர் ஈஸ்வரன் கோவில் எதிரே அமைந்துள்ள திருமண மண்டபம் அருகே காலி இடத்தில் தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்கப்பட்டுள்ளது. இக்கடையின் பகுதியில் மண்ட பத்தின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சுவரை, வியாழனன்று இரவு, சிலர் இடித்துக்கொண்டிருந்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்புகையில், கடையின் உரிமையாளர் என்று கூறப்ப டும் கதிரேசன், ஒருமையில் பேசியதோடு, அரசு அதிகாரி கள், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தலைவர் ஆகியோ ரைக் தகாத வார்த்தைகளால் திட்டினார். பேரூராட்சிக்கு சொந்தமான இச்சுவர் இடிப்பதற்கு பேரூராட்சியின் உதவி இயக்குனர் அலுவலரிடம் முறையான அனுமதி பெறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முறையாக அனுமதி பெறாத பட்சத்தில், பட்டாசு கடையின் உரிமையாளர் கதிரசன் மீது பேரூராட்சி நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுத்து, கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிக்கப்பட்டுள்ளது.