tamilnadu

நீரில் மூழ்கிய பயிர்களின் பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்!

நீரில் மூழ்கிய பயிர்களின் பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

சென்னை, அக். 22 - தமிழகத்தில் தீவிரமடைந் துள்ள வடகிழக்கு பருவமழை யால், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பயிர் களின் பாதிப்பு குறித்து கணக் கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ  மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பலவிதமான பாதிப்பு களுக்கு ஆளாகியுள்ளனர்.  தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக  பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பி னும், விவசாயிகள் கைமுதலை இழந்து பெரும் நட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.   தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் சேதம்! திருவாரூர், தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, புதுக் கோட்டை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக் கான ஏக்கரில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.  மேலும், சம்பா நடவு செய்யப் பட வேண்டிய நிலத்திலும் நீர் தேங்கியிருப்பதால், சம்பா நடவும் பாதிப்பை சந்திக்கக் கூடிய நிலை யில் உள்ளது.  கணக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும்! மேலும், சில மாவட்டங்களில் கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காச் சோளம், பூச்செடிகள் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  மிகக்கடுமையான பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ள இத்தரு ணத்தில், தமிழ்நாடு அரசு பயிர்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி களில் கணக்கெடுப்புக்கு உத்தர விடுவதுடன் பாதிப்புகளுக்கு ஏற்ற இழப்பீடு கிடைக்கும் நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்படும் வகையில் அரசின் அணுகுமுறை இருப்பது அவசியம். சேதமடைந்த நெல்லுக்கு இழப்பீடு வழங்குக! இந்த ஆண்டு குறுவை சாகுபடி கூடுதலான பரப்பளவில் நடை பெற்றுள்ளது. தொடர் மழை யினால் கொள்முதல் செய்யப் பட்டுள்ள நெல் மூட்டைகள் மழை யில் நனைந்து வீணாகாமல் பாது காப்பாக வைப்பதற்குரிய மாற்று ஏற்பாடுகளை போர்க்கால அடிப்ப டையில் அரசு செய்ய வேண்டும்.  தேவையான அளவு நிரந்தரமான கிடங்கு வசதிகளை உருவாக்கிட அரசு திட்டமிட வேண்டும்.  நெல் கொள்முதல் நிலை யத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட நெல் மூட்டை களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். முதல்வர் கடிதம் எழுதியும் பாஜக அரசு அலட்சியம்! அதே நேரத்தில், அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழை யால் கூடுதலான ஈரப்பதத்தைக் கொண்டிருப்பது தவிர்க்க முடி யாதது. இதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 22 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று ஒன் றிய அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளார். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இதற்கு அனுமதி தராமல் காலம் கடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. இதனால் பல்லாயிரக்கணக்கான விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, உடனடியாக 22 சத விகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய  ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டுமென்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடு மாநில செயற்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.