பொதுமக்களிடம் புகார் மனு பெற்ற ஆணையர் அருண்
சென்னை, செப்.3- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகா மில், பெண்கள் உட்பட 15 பேரிடம் நேரடியாக சென்னை காவல் ஆணை யர் அருண் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் பொது மக்களுக்கான குறைதீர்வு முகாம் நடந்து வருகிறது. அந்த வகையில் புதனன்று நடந்த குறை தீர்வு முகா மில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் முதிய வர்கள் என மொத்தம் 15 பேரி டம் தனித்தனியாக அவர்களி டம் குறைகளை கேட்டறிந் தார். பிறகு வாங்கிய மனுக் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி களுக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சி யின் போது சென்னை காவல்துறை தலைமையிட துணை ஆணையர் கீதா உடன் இருந்தார்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னை,செப்.3- ஆபணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.9,805-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.78,440-க்கும் விற்பனை யானது. இதன் மூலம் கடந்த 9 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,000 உயர்ந்து ள்ளது.