சென்னை, செப்.7- முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார காலம் அரசு முறை பயணமாக சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் சந்தித்ததாக, முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான அவருடைய பதிவில், “முல்லைப் பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும் பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கை களையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க ஜான் பென்னி குயிக் - அவர்களது புகழ்!” என்று குறிப்பிட்டுள்ளார்.