செப்.1-இல் மாநகராட்சி முன்பு உண்ணாவிரதம் சிஐடியு தரைக்கடை வியாபாரிகள் முடிவு
திருச்சிராப்பள்ளி, ஆக.27 - சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தரைக்கடை சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித் தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டச் செய லாளர் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஞ்சப்பூ ருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், கடந்த 45 நாட்களாக மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வரவில்லை. இதனால் வருமான மின்றி தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரி கள் 70-க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தும் இதுநாள் வரை பஞ்சப்பூ ரில் கடை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. எனவே வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்கவும், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தரைக்கடை, தள்ளுவண்டி கடை நடத்த உரிய இடம் ஒதுக்க கோரியும் செப்டம்பர் 1 ஆம் தேதி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக் கடை. தள்ளுவண்டி வியாபாரிகள் குடும்பத் தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. மத்திய பேருந்து நிலையத்தை, பேருந்து நிலையமாகவே தொடர்ந்து செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும். செப்.1 அன்று ஏகாதி பத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீரங்கத்தில் நடத்துவது. செப்.5 ஆம் தேதி பொன்மலை தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சியில் தரைக் கடை சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வது. செப்.14 ஆம் தேதி நடைபெற உள்ள சிஐடியு திருச்சி மாவட்ட மாநாட்டில் தரைக்கடை வியா பாரிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.