அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி/பெரம்பலூர், செப்.2 - செப்டம்பர் 1 உலக சமாதான தினம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தினத்தையொட்டி, ஆயுத விற்பனைக் காகவும் கனிமவள கொள்ளைக்காக வும் அமெரிக்கா உலகம் முழு வதும் போர் நடத்துகிறது. இதைக் கண்டித்தும், பல்லாயி ரக்கணக்கான பச்சிளம் குழந்தை களை கொன்று குவிக்கும் இஸ்ரே லுக்கு ஆயுதங்களையும், கட்டு மானத் தொழிலாளர்களையும் அனுப் புவதை நிறுத்த வேண்டும். இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பை அமெரிக்கா உடனடியாக கைவிட வலியுறுத்தியும் சிஐடியு திருச்சி மாநகர் சார்பில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிபிஎம் மாநில கட்டுப் பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சார்லஸ், தரைக்கடை சங்க மாவட்டச் செய லாளர் செல்வி, சிஐடியு ஸ்ரீரங்கம் பகுதி ஒருங்கிணைப்பாளர் ரகுபதி ஆகியோர் பேசினர். பெரம்பலூர் சிஐடியு பெரம்பலூர் மாவட்டம் சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம், திங்கள்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வா கிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.