பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு மனு
பெரம்பலூர், அக். 14- பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம், பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மிருணாளினியிடம் மனு அளித்தனர். அம்மனுவில், எம்ஆர்எப் டயர் கம்பெனியில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகர் பகுதியான பாலக்கரையில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீதும், அனுமதி வழங்கிய துறை அலுவலர்கள் மீதும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொழுநோய் சர்வே செய்த பணியில் தொகை முறைகேடு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, குணசேகரன், பன்னீர்செல்வம், ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
