சிஐடியு கரூர் மாவட்ட 10 ஆவது மாநாடு
கரூர், ஜூலை 28- சிஐடியு சங்க கரூர் மாவட்ட 10 ஆவது மாவட்ட மாநாடு க.பரமத்தியில் உள்ள செல்வகுமார் திருமண மண்டபத்தில், (தோழர் கோவை எஸ்.ஆறுமுகம் நினைவரங்கம்) ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டிற்கு சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிஐடியு சங்க செங்கொடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு ஏற்றி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். வரவேற்புக் குழு தலைவர் கே.கந்தசாமி வரவேற்று பேசினார். சிஐடியு சங்க மாநில செயலாளர் எம்.ஐடாஹெலன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் வேலை அறிக்கையை முன் வைத்துப் பேசினார். மாவட்டப் பொருளாளர் ப.சரவணன் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். சிஐடியு சங்க மாநில துணைச் செயலாளர் ஆர்.சிங்கராவேலு சிறப்புரையாற்றினார். வரவேற்புக் குழுச் செயலாளர் சி.ஆர். ராஜாமுகமது நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக சி.ஆர். ராஜாமுகமது, மாவட்டச் செயலாளராக எம்.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளராக என். சாந்தி மற்றும் 12 மாவட்ட நிர்வாகிகள் உட்பட்ட 47 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், கியூபா நிதியாக ரூ.6,100-யும், சிஐடியு செய்தி புத்தகம் 100 எண்ணிக்கைக்கும் தொகையை வழங்கினர். உள்ளாட்சிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூர் காகித ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரூரில் ஜவுளி தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.