tamilnadu

img

கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர் கால சிற்பங்கள், கற்றளி கட்டுமானம் கண்டுபிடிப்பு

கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர் கால சிற்பங்கள், கற்றளி கட்டுமானம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, ஆக. 12-  புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் வட்டம் செனையக்குடியில் சோழர் கால கலைப் பாணியிலான  சைவம், வைணவம், சமணம் என மூன்று மதங் களுக்குரிய சிற்பங்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறு வனர் ஆ.மணிகண்டன் தலைவர், மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் ஆகி யோர் தலைமையிலான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல் கலைக்கழக தொல்லியல் துறை  ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண் டன் கூறியதாவது,  சிவன் கோவில் செனையக்குடி பிடாரி கோவில் அருகே வயல் மேட்டில், சோழர்கால கற்றளி இடிமானங்களுடன் தவ்வை எனும் மூத்த தேவி சிற்பம் காணப்படு கிறது. சிற்பத்தின் இரு புறங்களிலும், மாந்தன் மாந்தியுடன், உச்சியில் குடை யும், பக்கவாட்டின் மேலாக இரு சாமரம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் தோற்ற அமைதியின் அடிப்படையில் இதனை பதினொன்றாம் நூற்றா ண்டைச் சேர்ந்ததாக கருதலாம். இவ்விடத்தில் சைவக்குறியீடான நந்தி சிற்பம் மண்ணில் புதைந்த நிலை யில் காணப்படுகிறது இந்த நந்தி சிற்ப மும் அதே காலகட்டத்தைச் சேர்ந்த தாக இருக்கலாம்.  கோவில் இடிமானத்தில்  வைணவ நிலக்கொடைக்குரிய வாமன கோட்டு ருவ பலகைக்கல் கண்டுபிடிக்கப்பட்டு, கல்வெட்டுப்படி எடுக்கப்பட்டது. இதன் காலம் கணிக்கப்படவில்லை. எனினும் இவ்விடத்தில் பிற்கால சோழர்களின் பாணியிலான தூண்கள், கட்டுமான உறுப்புகளுடன் காணப்படுகின்றது. சூலக்கல் செனையக் குடி ஊரின் பனைமரக் காட்டில் சிவன் கோவில் நிலத்தை  குறிக்கும் சோழர் கால கலைப் பாணி யிலான சூலக்கல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க லாம் என்று நம்பப்படுகிறது. அய்யனார் சிற்பங்கள் அதே போல கரும்பு வயல்வெளி யில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப் பட்டது. இதில் அய்யனார் தாமரை மொட்டினை வலது கையில் ஏந்திய வாறும், இடது கையை இடது முழங்கா லில் வைத்தவாறு, சாந்த நிலையில் புன்னகைத்தவாறு செதுக்கப்பட்டுள்ளது.  தோற்ற அமைதியின் அடிப்படை யில் இதனை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம். மேலும் செனை யக்குடி பெரிய கண்மாயில் புதர்க்காட்டில் வலது கை உடைந்த நிலையில் செண்டு அமைப்புடன் பதி னொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த  மற்றொரு அய்யனார் சிற்பமும் காணப்படுகிறது, இரண்டு சிற்பங் பளும் ஜடா பாரம் எனப்படும் சுருண்ட முடியுடன் சோழர் கலைப்பாணியில் காணப்படுகின்றன. ஆறுமுக முருகன் சிற்பம் வயல்வெளியில் உள்ள ஒரு மேட்டில்,  ஆறு தலைகளுடன் கூடிய முருகன் சிற்பம், மயில் வாகனத்தில் அமர்ந்தவாறு மார்புச் சங்கிலியுடன் 12 கரங்களில் வலது புறத்தில் ஆறு கரங்கள் மட்டுமே உள்ள நிலையில்  ஆயுதங்களுடன் தாமரை பீடத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஒப்பு மையில் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.  விஷ்ணு சிற்பம்  செனையக்குடி கண்மாயின் கிழக்கு புறமுள்ள பொட்டல் காட்டில் சங்கு சக்கரத்துடன் நின்ற நிலையில், 13ஆம் நூற்றாண்டின் கலைப் பாணியுடன் கூடிய விஷ்ணு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாத சமணர்  விஷ்ணு சிற்பத்தின் அருகிலேயே  புதர் மறைவில்  தலை மற்றும் கால் உடைந்த நிலையில் ஒன்பதாம் நூற்றா ண்டைச் சேர்ந்த எளிய தோற்ற அமைப்பு டன்  சமண சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது. இது ஏனைய சைவ வைணவ சிற்பங்களுக்கு முந்தைய காலகட்ட த்தைச் சேர்ந்தது. அக்னி ஆற்றங் கரை யில் தொடர்ச்சியாக சமணத் தடயங்கள் கிடைத்து வருவதன் மூலம் சமணம் சார்ந்த இந்த கண்டுபிடிப்பு புதிய வர லாற்று ஆய்வுகளுக்கு  வெளிச்சமாக இந்த கண்டுபிடிப்பு அமையும் என்றார். ஆய்வின்போது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முன்னாள் மாணவர் ரெங்க ராஜ், செனையக்குடி ஊர்த் தலைவர் மாரியப்பன், தொல்லியல் ஆர்வலர்  சிவனடியார் மாரிமுத்து, கிராம உதவி யாளர் மாரிமுத்து, முருகேசன், பெர ண்டையாப்பட்டி திருநாவுக்கரசு, வாசுதேவன், செனையக்குடி மணிகண் டன், மணி, பாலசுப்பிரமணியம், திலீப், முருகானந்தம், வெள்ளைச்சாமி, பிரகாஷ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொது மக்கள் உடனிருந்தனர்.