‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
சென்னை, ஜூலை 14- தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சிறப்பு முகாமில் பெறும் விண்ணப் பம் மீது 45 நாட்களில் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று காலை 9.30 மணிக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் தொடங்கி வைக் கும் இந்த முகாம் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம் பணிக்கு சுமார் ஒரு லட்சம் தன்னார் வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் சார்பில் 46 சேவையும் வழங்கப்படும். மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டா லின் முகாம்களில் மட்டுமே வழங்கப் படும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்களும் நடத்தப்படும். கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், திங்களன்று (ஜூலை 14) மாலை 6 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இராமேஸ்வ ரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டார். ஜூலை 15 அன்று காலை 9.15 மணிக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெ றும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் காமராசர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து, 9.30 மணிக்கு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனு தாரர்களுடன் கலந்துரையாடுகிறார். புரட்சிகரமான திட்டம் இந்நிலையில், சமூக வலை தளங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதி வில், “ஜூலை 15 அன்று தொடங்கு கிறது ஒரு புரட்சிகர திட்டம். அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து, அதனை பெற்று தீர்வு காண்பதுதான் ‘உங்களுடன் ஸ்டாலின்’. ஆயிரம் முகாம் நடை பெறவுள்ளது. இது குறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா” என தெரிவித்திருக்கிறார்.