tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி, தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது வாழ்த்துப் பதிவில், “ஆழ்ந்த அறி வும், தெளிவான சிந்தனையும், உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வியை மாநில  பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உயர்நிலைக் குழுவிடம் பரிந்துரை

சென்னை: சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண  வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசால் அமைக்கப் பட்ட ஒன்றிய - மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக் குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலை மையிலான இக்குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த  ஆக.14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாநில திட்டக்குழு  உறுப்பினர் நா.எழிலன் எம்எல்ஏ விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையில், “மாநிலப் பட்டியலில் இருந்த மருத்துவக் கல்வி 42 ஆவது திருத்தம் மூலம் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. நீட் தேர்வு காரணமாக கிராமப் புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பிரதிநிதித்துவம் 14.9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்தது” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

 சென்னை: பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்  புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட பட்டானூ ரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராம தாஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முன்ன தாக அன்புமணி ராமதாஸ் தலைவர் பொறுப்பு வகித்து  வந்தார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் 37 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவுக்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலும், அவருக்கு அழைப்பும் விடுக்கப் பட வேண்டும் என்று கட்சியின் விதியில் திருத்தம் செய்யப் பட்டது. மேலும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்  கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புமணிக்கு பதிலடி

 தருமபுரி: திமுக அரசு தருமபுரி மாவட்டத்தை புறக் கணிப்பதாக பாமக செயல் தலைவர் அன்புமணி ராம தாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக் கும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியில் திமுக  தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை” சுட்டிக் காட்டி இருக்கிறார்.

முதலமைச்சருக்கு கோரிக்கை

 சென்னை: வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்  இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத் தால், இருக்கும் தரவுகளை கொண்டு ஒரு வார காலத்திற் குள் வழங்க முடியும் என்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

 தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

டெண்டர் வெளியீடு  

சென்னை: நீலகிரி, குன்னூர், எடப்பள்ளி அருகே எட்டு ஏக்கரில் அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கூறியிருக்கும் தமிழ்நாடு அரசு, டைடல் பார்க் அமை வதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்று தெரிவித்திருக் கிறது.

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20  ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  இந்நிலையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை யொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு ஞாயிறன்று காலை 8 மணி  முதல் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம், “இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www. irctc.co.in அல்லது செல்போன் செயலி மூலம் முன்பதிவு  செய்து கொள்ளலாம். அக்.16 ஆம் தேதி (வியாழன்) செல்பவர் களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடை பெற்று வருகிறது. அக்.17 ஆம் தேதிக்கான முன்பதிவு திங்களன் றும் (ஆக.18), அக்.18 ஆம் தேதிக்கு செவ்வாயன்றும் (ஆக.19), அக்.19 ஆம் தேதிக்கு ஆக.20 (புதன்கிழமை) அன்றும், தீபாவளி நாளான அக்.20 ஆம் தேதிக்கு, ஆக.21  (வியாழன்)  அன்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என  தெரிவித்துள்ளது.

நீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் கர்நாடகாவின் கபினி,  கே.ஆர்.எஸ். அணை களில் இருந்து தண்ணீர்  திறப்பு அதிகரித்து உள்ளது. இதன் காரண மாக மேட்டூர் அணைக்கு திங்களன்று மாலைக்குள் விநா டிக்கு 45,000 கன அடி யாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என ஒன்றிய நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்வே கேட்டை சனிக் கிழமை ரயில் கடக்கும் போது மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், கேட் கீப்பர் ஜெய்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதி யான விசாரணையும் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.