tamilnadu

img

ரூ.13,016 கோடி முதலீடு ஈர்ப்பு முதலமைச்சரின் ஐரோப்பிய பயணத்தில்

ரூ.13,016 கோடி முதலீடு ஈர்ப்பு முதலமைச்சரின் ஐரோப்பிய பயணத்தில்

சென்னை, செப். 5– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பிய முதலீட்டு சந்திப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடு களுக்கு அரசு முறையில் பயணம் மேற்கொண் டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லண்ட னில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவரது முன்னி லையில், 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாது காப்பு தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்  நிறுவனம் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த முன்வந்துள்ளது. மேலும், ஓசூரில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதி, ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டு மையம், பயிற்சி மையம் ஆகிய வற்றை நிறுவ இந்த நிறுவனம் ஆர்வம் வெளிப் படுத்தியுள்ளது. லாயிட்ஸ் லிஸ்ட் இண்டலிஜென்ஸ் நிறுவனம்,  சென்னையில் தனது உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்த ஒப்பந்தம் கையெழுத்திட் டுள்ளது. இதில் 2026 நிதியாண்டில் 200 பேருக்கு  வேலைவாய்ப்பு உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்ததாக, வில்சன் பவர் அண்ட் டிஸ்ட்ரி பியூஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில்  புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையம் நிறுவ  ரூ. 300 கோடி முதலீடு செய்து, 543 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. மேலும், பிரிட்டானியா டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம்  திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட உற்பத்தி பிரிவு தொடங்க ரூ.520 கோடி முதலீடு செய்து, 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. கோயம்புத்தூரில் வடிவமைப்பு சார்ந்த உயர்கல்வி நிறுவனம் தொடங்க, சக்தி எக்சலன்ஸ் அகாடமியின் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் எக்ஸிடெர் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  முன்னதாக, ஜெர்மனியில் ரூ. 3,201 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஒட்டு மொத்தமாக ரூ.7,020 கோடி  முதலீட்டுக்கும் 15,320 பேருக்கு வேலை வாய்ப்புக் கும் வழிவகுக்கும் வகையில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்துஜா குழுமம் தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில் நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ.  5,000 கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையொப்பம் இட்டுள்ளது. இதன் மூலம்  1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை  வாய்ப்புகள் உருவாகும். மேலும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. சென்னையில் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை ரூ.176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்ய வுள்ளது.  முதலமைச்சரின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு  பெற்ற மொத்த முதலீடு ரூ.13,016 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 17,813 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.