tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனுக்கு முதலமைச்சர் புகழாரம் '

சென்னை: மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்ட மறுத்து, நெற்கட்டும் செவலை நெற்கட்டான் செவ லாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவருக்கு என் வீரவணக்கம். சிப்பாய்ப் புரட்சிக்கு  நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென் தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத் தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர  வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட  இந்நாளில் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய விவகாரம்! எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறையில் புகார்

சென்னை: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதி யில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது,  மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று  வந்தது. இதைப் பார்த்து கோபமடைந்த அவர், அடுத்த  கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதில் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார்” என்றார். இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்பு லன்ஸ் ஓட்டுநர், “பள்ளிகொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அணைக் கட்டு சென்றேன். 10 மணிக்கு மேலாகி விட்டதால், அதிமுக  நிகழ்ச்சி முடிந்திருக்கும் என்று கருதியே அணைக்கட்டு வழியாக சென்றேன். ஆனால், அங்கிருந்தவர்கள் என்னைத்  தாக்கி, வாகனத்தைச் சேதப்படுத்தினர்” என்றார். இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும், அவர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு  108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புலம்பெயர்  தொழிலாளர் நிலை ஆய்வு தொழிலாளர் நலத்துறை திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழி லாளர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள முடிவு  செய்யப்பட்டுள்ளது.  அதன்படி புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக் கெடுக்கும் பணிக்குத் தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி யுள்ளது.  தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை ஆய்வு செய்யத் தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 38  மாவட்டங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணக் கெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது சுமார் 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி யாற்றி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் வருகைக்கான காரணம், அவர்கள் எங்கு உள்ளனர், வாழ்க்கை நிலை, சுகாதார  நிலை, என்ன பணி செய்கின்றனர் என்பது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லை சத்யா தற்காலிக நீக்கம் வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மல்லை  சத்யாவைத் தற்காலிகமாக நீக்குவதாக அந்தக் கட்சி யின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக மல்லை  சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும், மல்லை சத்யா 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தனக்கு பதிலளிக்க வேண்டும் வைகோ தெரிவித் துள்ளார்.

அமலாக்க துறைக்கு உத்தரவு

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அம லாக்கத்துறை உதவி இயக்குநர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற உத்த ரவை அமல்படுத்த வில்லை என்று கூறி அம லாக்கத் துறைக்கு எதி ராக சினிமா தயாரிப்பா ளர் ஆகாஷ் பாஸ்கரன்  தொடர்ந்த நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில் நீதி மன்றம் இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளது

மான் மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை: நீதித் துறையை ஆபாசமாக விமர்சித்த புகாரில் சீமான்  மீது வழக்குப்பதிவு செய்யக் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சீமான் பேச்சு குறித்து வழக்கறி ஞர் சார்லஸ் அலெக்சாண் டர் என்பவர் அளித்த புகார்  மீது போலீசார் நடவ டிக்கை எடுக்காததால், அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

தேர்தலில் சூர்யா போட்டியில்லை

சென்னை: 2026 சட்ட மன்றத் தேர்தலில் சூர்யா  போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் பொய்ச் செய்தி பரப்படு கிறது. இது அவரின் கோட்பாடுகளுக்கு முர ணானது. அவரது கவ னம் சினிமாவில் மட்டுமே இருக்கும். அவரது கலை உலகப் பயணமும், அகர மும் இப்போதைக்கு அவ ரது வாழ்வுக்கு போதிய  நிறைவை தந்துள்ளது. ஆகவே, சூர்யா அரசிய லுக்கு வரப்போவதில்லை என்று அவரது தலைமை நற்பணி இயக்கம் சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

சொத்து முடக்கம்?

சென்னை: படத்தில் நடிக்க பெற்ற முன்பணம் ரூ.6 கோடியை திரும்ப அளிக்க கோரிய வழக்கில் திரைக் கலைஞர் ரவி மோகன் உத்தரவாதம் தாக்கல் செய்யவில்லை. இதனால், அவரது சொத்துக்களை முடக்க  வேண்டும் என்ற ‘பாபி டச் கோல்டு’தயாரிப்பு நிறு வனத்தின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய  சென்னை உயர்நீதிமன் றம் அனுமதித்துள்ளது.

பெருமையாம்!

சென்னை: சி.பி. ராதா கிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக வருவது ஆர்எஸ்எஸ்-க்கும் தமிழருக்கும் பெருமை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலை வர் அண்ணாமலை தெரி வித்திருக்கிறார்.