tamilnadu

img

இடைக்காட்டூரில் தேவாலய சீரமைப்பு பணியை பார்வையிட்ட முதல்வர்

இடைக்காட்டூரில் தேவாலய சீரமைப்பு பணியை பார்வையிட்ட முதல்வர்

சிவகங்கை, செப்.3- மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய சீரமைப்பு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வை யிட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பழமையான திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இது  1894 இல் கட்டப்பட்டது. இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டு ‘கோத்தி கட்டிடக் கலை  அடிப்படையில் சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்ட கலவையில் கட்டப்பட்டது. இங்கு  ‘சம்மனசு’ என்ற வான தூதர்கள் 153 பேரின்  உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெ னவே இந்த ஆலயத்தைச் சுற்றுலாத் தல மாக அரசு அறிவித்தது.  இந்த ஆலயத்தைப் பழமை மாறாமல்  சீரமைக்க ரூ.1.55 கோடியை அரசு ஒதுக்கி யது. முதல்கட்டமாக ரூ.77.60 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைத்தல், ஜன்னல் கண்ணாடிகள். மின் சாதனங்கள் சீர மைக்கப்பட்டு வருகின்றன. அதை  முதல்வர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக அவருக்கு திருப்பு வனத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும்  முதல்வரை மாவட்ட ஆட்சியர் கா.பொற்  கொடி, மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சிவ பிரசாத் வரவேற்றனர்.