சென்னை, ஜூலை 19 - தமிழக முன்னாள் முதல்வர்- கலைஞர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க .முத்து உடல்நலக் குறைவால் சென்னையில் காலமா னார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணா நிதி - பத்மாவதி தம்பதிக்கு 1948- ஆம் ஆண்டு மகனாக பிறந்த மு.க. முத்து 1970-களில் தமிழ் சினிமா வில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல் காரன்’, ‘அணையா விளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’, ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல் களையும் பாடியிருக்கிறார். 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ‘மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க. முத்து. திமுக மேடைகளில் கட்சி யின் கொள்கை விளக்க பாடல் களைப் பாடியுள்ளார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி தான் மு.க. முத்துவின் தாயார் பத்மா வதி. அண்மைக் காலமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு.க. முத்து சனிக்கிழமை (ஜூலை 19) கால மானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத் தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. பின்னர், கலைஞரின் கோபால புரம் இல்லத்திற்கு கொண்டுவரப் பட்டது. அங்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
தன்னுடைய சகோதரர் மு.க. முத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் தலைவர் கு. செல்வ பெருந்தகை எம்எல்ஏ, முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மு.க. முத்துவின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை, பெசண்ட் நகர், மின் மயானத்தில் மு.க. முத்து உடல் தகனம் செய்யப் பட்டது. முன்னதாக, மு.க. முத்துவின் மறைவையொட்டி, முதல்வர் ஸ்டா லின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சி கள் ரத்து செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது.