tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழகத்தில் செப். 23 வரை  மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.18- தமிழ்நாட்டில் செவ்வாய் க்கிழமை (செப். 23) வரை, மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.  செப்டம்பர் 19 அன்று தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திரு வள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட் டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். செப். 22 அன்று வட  தமிழ்நாட்டில் ஒரு சில இடங் களிலும், தென் தமிழ்நாட் டில் ஓரிரு இடங்களிலும் லே சான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.23 அன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, செப். 18 - சென்னை சைதாப் பேட்டை ஸ்ரீநகர் காலனி யில் வசித்து வருபவர் தொழி லதிபர் ராமகிருஷ்ணன் ரெட்டி. கட்டுமான நிறு வனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாது காப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள், வியாழக்கிழ மை காலை முதல் சோதனை மேற்கொண்டனர். அதே போல் சென்னை புரசைவாக் கம் பகுதியில் மோகன்லால் காத்ரி என்பவர் இல்லத்தி லும் அமலாக்கத் துறை அதி காரிகள் சோதனை செய்த னர். இவர் மொத்த தங்கநகை வியாபாரியாக இருந்து வரு கிறார். சவுகார்பேட்டை பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவருக்கு தொடர்புடைய வேளச்சேரி, மேற்கு மாம் பலம் மற்றும் அடையாறு பகுதிகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத் தியதாக தகவல்கள் தெரி விக்கின்றன.