tamilnadu

img

சமோசா எடு ஜெயிக்கவை

சமோசா எடு   ஜெயிக்கவை 

பள்ளிக்கூடத்தில் ஜனநாயகத்தை சொல்லிக் கொடுக்கும் வகையில் மாதிரி தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். பள்ளி ஆசிரியர் ஒருவர் ‘மாஸ்டர்ஜி’ என்ற பெயரில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இன்ஸ்டாகிராமில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைப் பார்த்துள்ளனர். பலரும் பகிர்ந்திருக்கிறார்கள்.  வேடிக்கையாக, எளிதில் புரியும் வகையில் ஜனநாயகத்தைப் பற்றி அவர் வகுப்பு எடுத்தாக நிறையப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு வேட்பாளர்கள், அவர்களுக்கு சின்னங்கள் என்று தேர்தல் துவங்கியது. தேர்தல் நேர்மையாக நடந்ததாக அந்தப்பதிவு செல்கிறது. கைகளில் மை வைத்துக் கொண்டு வாக்கை செலுத்தி விட்டு வருகிறார்கள். தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன. சமோசா சின்னத்தில் நின்ற சோமேஷ் வெற்றி பெறுகிறார். அதோடு பதிவு நிற்கவில்லை. பிரச்சாரத்தின்போது வாக்களித்தால் சமோசா தருவதாக சோமேஷ் உறுதிமொழி தந்தாராம். “சமோசா எடு; சோமேஷை ஜெயிக்க வை” என்பதை தேர்தல் முழக்கமாக வைத்தார். வெற்றி பெற்ற பிறகு, அனைவருக்கும் “நேர்மையாக” சொன்னபடி சமோசா வாங்கித் தருகிறார். அனைவரும் மகிழ்ச்சியுடன் சமோசா சாப்பிடும் காட்சியுடன் அந்த வீடியோ முடிகிறது. ‘சமோசா லஞ்சம். இதுவும் வாக்குத்திருட்டுதான். ஜனநாயகத்தை இப்படியா கேலிக்கூத்தாக்குவது’ என்று நெட்டிசன்கள் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.