tamilnadu

img

பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு  எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு  எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, செப். 2 -  தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப் பட்டதை எதிர்த்து சென்னை உய ர்நீதிமன்றத்தில் முறை யீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31  அன்று பணி ஓய்வு பெற்றார். இதை யடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வெங்கட ராமன் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வழக்குரைஞர் வரதராஜ் என்பவர் சார்பில்,  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.  மனுதாரர் தரப்பில் முறையிட்ட வழக்குரைஞர் பிரசாந்த் நடராஜ், தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்கக் கூடாது  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன் அடிப்ப டையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்தது  சட்டவிரோதம். இது தொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள  வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்ட நீதிபதி கள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.