அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு
ஆக. 26-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஆக. 21 - பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இத்திட்டத்தை, ஆகஸ்ட் 26 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் சுமார் 3.05 லட்சம் மாணவர்கள், இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, கடந்த 2022 செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. தற்போது 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவர்கள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்; இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது; 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடு களையப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இத்திட்