புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 23 கடைசி நாளாகும். இந்த நிலையில், இரு தொகுதிகளில் போட்டியிட உள்ள புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, இன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து மங்களம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
