tamilnadu

img

மதுரை எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நலத்திட்டங்கள்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள் கடந்த வாரம் துவக்கிவைக்கப்பட்டன.
68ஆவது வார்டு பொன்மேனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை, 46ஆவது வார்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. குடிநீர் தொட்டி, 43ஆவது வார்டு கணேஷ் தியேட்டர் அருகில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சலவைக் கூடம் மற்றும் கழிப்பறை ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி. நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் மாமன்ற உறுப்பினர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி பாண்டியன், முகேஷ் சர்மா, முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன் வை.ஸ்டாலின், பகுதி குழு செயலாளர் பி.வீரமணி, மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.