விண்வெளி ஆராய்ச்சி
ஷெகனாஸ் கார்டன். அந்த நகரில் மொத்தம் 120 வீடுகள் இருந்தன. அவைகளில் ஓரிரு வீடுகள் தவிர அனைத்திலும் முஸ்லிம்களே. அங்கிருக்கும் முஸ்லிம்களில் பல உட்பிரி வினர் இருந்தனர். நகருக்கென்று ஒரு சங்கம் இருந்தது. சங்கத் திற்கு தலைவர், பொருளாளர், செயலாளர் இருந்தனர். நகர் மக்கள் சங்கத்திற்கு சிறிதும் ஒத்துழைப்பு நல்கவில்லை. நகரில் கஞ்சாவிற்கும் வியாபாரியும் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் அயோக் கியர்களும் கூட இருந்தனர். சில ஐந்தாம் படையினர் ரியல்எஸ்டேட் தாதாவுடன் கூட்டு சேர்ந்து சங்கத்தை கலைத்து விட அரும்பாடுபட்டனர். சங்கத்தின் தொடர் போராட்டத்தால் நக ருக்கு தார்சாலை, தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு, தினம் குப்பை அகற்றம் கிடைத் தும் நன்றி மறந்தனர். தலைவர் மஹ்மூத் நெய்னா சங்க நடவடிக் கைகளில் தொடர்ந்து சுறுசுறுப்பாய் ஈடுப டாது சற்றே விலகி இருந்தார். வாசலின் அழைப்பு மணி சிணுங்கியது. எழுந்து போய் கதவைத் திறந்து விட் டார் மஹ்மூத். நால்வர் வந்திருந்தனர் நால்வரில் ஒருவர் வணங்கினார். “வணக்கம் மஹ்மூத் சார்!” “வணக்கம்…. நீங்கள்?”’ “என் பெயர் கண்ணபிரான். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இருக்கிறேன். இவர் பெயர் ரிஜ்வான். புத்தக விற்பனை செய்கிறார். இவர் பெயர் கணேஷ். பார்வையற்றவர் களுக்கு தேர்வில் உதவும் பணி செய்கிறார். இவர் பெயர் பெரோஸ்கான். இவர் கராத்தே மாஸ்டர்!” “மகிழ்ச்சி… உள்ள வாங்க!” உள்ளே வந்தவர்கள் வரவேற்பறை சோபா வில் அமர்ந்தனர். “மஹ்மூத் சார் உங்கள் அரசியல் கட்டுரை களை நிறைய வாசித்திருக்கிறோம். முக்கிய மாக இஸ்லாமிய சமுதாய மேம்பாட்டுக்காக உழைக்கிறீர்கள்!” “இந்த நகரில் என் முயற்சி எடுபட வில்லை!” “எங்கள் அறிவியல் இயக்க செயல்பா டுகளிலும் ஏராளமான முட்டுக்கட்டைகள் உண்டு. தடைகளைத் தாண்டி தான் செயல் படுகிறோம். மெத்தனம் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் சாபம்…” “என்ன விஷயமாக வந்தீர்கள்?” “உங்கள் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள எங்கள் அறிவியல் இயக்கம் விரும்புகிறது!” “நான் என்ன உங்களுக்கு உதவ முடியும்?” “இது நல்ல கேள்வி. உங்கள் வீட்டை ஒட்டி யுள்ள மரகத நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை ஒன்று ஆரம்பிக்கிறோம். அதில் நீங்களும் உங்கள் துணைவியாரும் இணைந்து செயலாற்ற வேண்டும்!” கண்ணபிரான் தமிழ்நாட்டு அறிவியல் இயக்க செயல்பாடுகளை விலாவாரியாக கூறினார். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தனக் கும் தன் மனைவிக்கும் ஐம்பது ஐம்பது ரூபாய் சந்தா தொகை நீட்டினார் மஹ்மூத். “மஹ்மூத் சார்! உங்கள் நகரில் உள்ள குழந்தைகளுக்கு பல அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவோம். நாளையிலி ருந்து 15 நாட்களுக்கு பள்ளி குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை. ஏழு நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள்…” “இடம்?” “உங்க வீட்டு மொட்டை மாடி அல்லது உங்கள் செயலாளர் வீட்டு மொட்டை மாடி அல்லது ரிஜ்வான் வீட்டு மொட்டை மாடி!” “ஏழு நாட்களுக்கு என்னென்ன நிகழ்ச் சிகள்?” “முதல் நாள் கணேஷ் அவர்கள் ‘விளை யாட்டு ஒரு கல்விதான்’ என்கிற தலைப் பில் பேசுவார். இரண்டாம்நாள் தூரிகை சின்னராசு ‘சிறார் இலக்கியம்’ பற்றி உரையாற் றுவார். நான்சி கோமகன் அவர்கள் மூன்றாம் நாள் குழந்தைகளுக்கு கதை சொல்லுவார். நான்காம் நாள் பெரோஸ்கான் குழந்தை களுக்கு தற்காப்பு கலை பற்றி சொல்லித் தருவார். ஐந்தாம் நாள் குழந்தைகளுக்கு களிமண் கொடுத்து பொம்மைகள் செய்யச் சொல்வோம். ஆறாவது நாள் ரமேஷன் சார் டெலஸ்கோப் வைத்து வான்நோக்கி பார்வை நடத்துவார். ஏழாம் நாள் மேஜிக் ஷோ. தேனியிலிருந்து வருவார் வீரைய்யா…” “இதற்கெல்லாம் எவ்வளவு செல வாகும்?” “தினம் வரும் குழந்தைகளுக்கு டீயும் பிஸ்கெட்டும் கொடுக்க சிறிதளவு செல வாகும்!” “ஓகே சார்… ஒரு வார நிகழ்ச்சி நிரலை எங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் போட்டு விடுகிறேன்… டிஸைன் பண்ணிக்கொடுங்கள்!” “மகிழ்ச்சி தோழர்!” எழுந்த கண்ணபி ரான் மெதுவாக மஹ்மூத் நெய்னாவின் காது களில் கிசுகிசுத்தார். “மக்கள் ஒத்துழைப்பு தரலன்னு புலம்ப வேண்டாம். ரெண்டே ரெண்டு குழந்தைகள் வந்தாலும் நிகழ்ச்சிகளை நடத்து வோம்!” எண்பது வயது இளைஞரின் தன்னம் பிக்கையை கண்டு பிரமித்து நின்றார் மஹ்மூத் நெய்னா. முதல் நாள் நிகழ்ச்சிக்கு குழந்தைகள் தயங்கி தயங்கி வந்தனர். குழந்தைகளின் பெற்றோர் ஒளிந்து நின்று அறிவியல் இயக்கத் தினர் பேசுவதை உளவறிந்தனர். இவர்கள் மார்க்கத்திற்கு எதிராக ஏதாவது பேசி குழந்தைகளின் ஈமானை சீர்குலைத்து விடுவார்களோ என்கிற பயம் அவர்களுக்கு. இரண்டாவது நாள் பத்து குழந்தைகள். மூன்றாவது நாள் பக்கத்து நகர்களிலி ருந்து குழந்தைகள் வருகை. நான்காவது நாள் கராத்தே கற்றுக் கொள்ள ஐந்து பேர் வந்திருந்தனர். பெண் குழந்தைகள் வரவில்லை. ஐந்தாம் நாள் களிமண் பொம்மை செய்ய பதினைந்து குழந்தைகள். ஆறாம் நாள் டெலஸ்கோப் வைத்து விண்நோக்கும் நிகழ்ச்சிக்கு நூற்றுக் கணக்கான குழந்தைகள் கூடிவிட்டனர். டெலஸ்கோப் வந்தது. டெலஸ்கோப்பை வான்நோக்கி பொருத் தினார் ரமேசன்… “மேகம் இல்லாம ஸ்கை கிளியரா இருத்தா போதும்… நிலவையும் நட்சத்திரங்களையும் மூக்குக்கு அருகே பார்த்து விடலாம்...” அப்போதுதான் அது நடந்தது! காட்சியமைப்புக்குள் நகரின் ஐந்தாவது தெருவில் குடியிருக்கும் அஜ்மல்கான் வந்தார். ரமேசனிடம் திமுதிமுவென போனார். “இந்த நிகழ்ச்சியை நடத்த யார் அனுமதி கொடுத்தது?” “உங்க தலைவர்!” “வானத்து நட்சத்திரத்தை ஆராய்வது ஹரா மான செயல். விண்கலையில் ஒரு பாகத்தை எவர் அல்லாஹ் குறிப்பிட்ட திசை நேரம் ஆகிய வற்றை அறியும் செயல்களுக்காக அல்லாமல் கற்பாராயின் நிச்சயமாக அவர் சூனியத்தின் ஒரு கிளையை கற்றவர் ஆவார். விண்கலை தெரிந்தோர் குறி சொல்பவரேயாவார். குறி சொல்பவர் சூன்யக்காரர் மற்றும் நிராகரிப் பாளர் என்கிறது ஒரு ஹதீஸ்...” மஹ்மூத் நெய்னா குறுக்கிட்டார். “ஹதீஸை தவறாக புரிந்துள்ளீர்கள் அஜ்மல். பண்டைக்கால அரேபியர்கள் மழை அல்லாஹ்வின் அருளால் மேகங்கள் வழி பொழிகிறது என்பதனை மறந்து நட்சத் திரங்களால் பொழிகிறது என நம்பினர். இறை நம்பிக்கைகள் இல்லாத விண்வெளி ஆராய்ச்சி தேவையற்றது என்பதே ஹதீஸின் பொருள். விஞ்ஞானத்தின் உச்சம் ஆன்மிகம். ஆன்மிகத்தின் உச்சம் விஞ்ஞானம். விண் வெளி பிரமாண்டமும் பால்வெளி பிரபஞ்சத் தின் ஒழுங்கு நேர்த்தியும் புவிஈர்ப்பு விசை இன்மையும் காலம் இன்மையும் அல்லாஹ் வின் இருப்புக்கான அத்தாட்சிகள். பல இஸ்லா மியர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் வெகு வாக சாதித்துள்ளனர். விண்வெளியின் மெஹா பிரமாண்டத்தில் நாம் ஒரு மைக்ரோ தூசு என்பதனை உணர்ந்தால் ஈமான் தழைக்கும். நபிகள் நாயகம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரா னவர். கல்விக்கு லட்சம் சதவீதம் சார்பா னவர். எல்லாவற்றையும் ஹராம் ஹராம் என ஒதுக்கி தள்ளினால் பொது நீரோட்டத் திலிருந்து விலகி பின் தங்கி விடுவோம். உங்கள் குழந்தைகளை நட்சத்திரங்களை நிலவை ரசிக்க விடுங்கள் அஜ்மல்!” அஜ்மல் விலகினார். ரமேசன் டெலஸ் கோப்பிக் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு மணி நேரம் விண்வெளி பௌதிகம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் எளிமையாக குழந்தை களுக்கு ஊட்டினார். -மறுநாள் காலை 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஹ்மூத்திடம் கோரிக்கை வைத் தன. “வாராவாரம் டெலஸ்கோப் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் நானா!” “டன்!” என கட்டைவிரல் உயர்த்தினார் மஹ்மூத் நெய்னா.
