articles

img

அறிவாற்றலை பாதிக்கும் இனிப்பூட்டிகள்

அறிவாற்றலை பாதிக்கும் இனிப்பூட்டிகள்

இனிப்பூட்டிகள் அறிவுத் திறனை பாதிக்கின்றன. 1.6 ஆண்டு முதுமையை முன்கூட்டியே ஏற்படுத்துகின்றன. குறைவான மற்றும் கலோரிகளற்ற இனிப்பூட்டிகள் (low- and no-calorie sweeteners LNCs) நடுத்தர வயதில் சிந்திக்கும் ஆற்றலையும் நினைவாற்றலையும் பாதிக்கின்றன. பாலாடைக் கட்டி மற்றும் சோடா போன்ற கார்பன் டை ஆக்சைடு கலந்த பளபளப்பான கார்பனேற்றப்பட்ட பானங்கள் (fizzy drinks) ஆரோக்கியத்திற்கு நீண்ட நாள் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. முதுமையை ஏற்படுத்தும் இனிப்பூட்டிகள் அஸ்பார்ட்டேம் (aspartame) , சாக்கரின் (saccharin) போன்ற இனிப்பூட்டிகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு அறிவாற்றலில் 62% குறைவு ஏற்படுகிறது. இது 1.6 ஆண்டுகள் அளவு வயதாவதற்கு சமமானது. குறைவான மற்றும் கலோரி களற்ற செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன் படுத்துவதால் அதிக பாதிப்புகள் ஏற்படு கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின் றனர். இனிப்பூட்டிகள் ஏற்படுத்தும் ஆபத் துகள் பற்றி எச்சரிக்கும் மிக சமீபத்திய ஆய்வு இது. இவை டைப்2 சர்க்கரை நோய், புற்று நோய், இதயக்கோளாறுகள், மன அழுத் தம், டிமென்சியா மற்றும் குடற்சுவர்களை பாதிக்கின்றன என்று முந்தைய ஆய்வுகள் கூறின. இனிப்பூட்டிகளுக்கும் அறிவாற்றல் குறைவிற்கும் இடையில் தொடர்பு உள்ளது. இதனால் நுகர்வோர் டகாட்டோஸ் (tagatose), தேன், மேப்பிள் சிரப் போன்ற இயற்கையான மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்தவேண்டும் என்று ஆய்வாளர் கள் வலியுறுத்துகின்றனர். டகாட்டோஸ் என்பது ஒரு அரிதான இயற் கை வழி சர்க்கரை. இது குடலிற்கு நட்புடை யது. லாக்டோஸ் அல்லது மற்ற பால் பொருட்களில் இருந்து இது தயாரிக்கப் படுகிறது. ஏழு வகையான இனிப்பூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி பங்கேற் பாளர்களிடம் ஆராயப்பட்டது.  இந்த ஆய்வில் பிரேசிலைச் சேர்ந்த சராசரியாக 52 வயதுடைய,  12,772 சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இவர் களின் ஆரோக்கிய நிலை பற்றி சராசரியாக எட்டாண்டுகள் கண்காணிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் முந்தைய ஆண் டில் எடுத்துக்கொண்ட உணவு மற்றும் பானங் கள் பற்றி வழங்கப்பட்ட வினாக்களுக்கு விடையளித்தனர். பிறகு தடையில்லாமல் சொற்களைப் பயன்படுத்துதல், நினைவு கூர்தல் போன்ற அறிவாற்றலுடன் தொடர் புடைய பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. குறைந்த அளவு இனிப்பூட்டிகளை பயன் படுத்தியவர்களை விட அதிகமாக எடுத்துக் கொண்டவர்களின் சிந்திக்கும் மற்றும் நினை வாற்றல் திறனில் 62% விரைவான குறைவு ஏற்படுகிறது. அஸ்பார்ட்டைம், சாக்கரின், அஸஸல்ஃபேம் கே (acesulfame K), எரித் ரிட்டால் (erythritol), ஸோபிட்டால் (sorbitol) மற்றும் சைலிட்டால் (xylitol) போன்ற குறைந்த அளவு, கலோரிகளற்ற இனிப்பூட்டிகள் அறிவாற்றல் திறனை இழக்கச் செய்கின்றன. செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்கு மாற்று அல்ல குறைந்த அளவு அல்லது கலோரிகளற்ற இனிப்பூட்டிகளை தினம் எடுத்துக்கொள் பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு, தடை யின்றி சொற்களைப் பயன்படுத்தும் ஆற்றல் மற்றும் உலகளவிலான அறிவாற்றல் போன் றவை துரிதமாக பாதிக்கப்படுகின்றன என்று நியூராலஜி (Neurology) என்ற அமெரிக்க மருத்துவ இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்றாலும் இந்த போக்கு அறுபது வயதிற்கு உட்பட்ட பங்கேற்பாளர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. அதனால் ஒரு சில இனிப்பூட்டிகளை மட்டுமே பயன்படுத்த நடுத்தர வயதினர் ஊக்குவிக்கப்படவேண் டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இனிப்பூட்டிகள் வாசனையூட்டப்பட்ட தண் ணீர், குறைந்த அளவு கலோரி உள்ள பானங் கள், டிஸெர்ட் (dessert), ஆற்றல் தரும் பானங்கள்போன்றவற்றிலும் கலந்துள்ளன. “பொதுவாக குறைந்த கலோரி உள்ள  அல்லது கலோரிகளற்ற இனிப்பூட்டிகள் சர்க்கரைக்கு மாற்றாக கருதப்படுகின்றன. ஆனால் சில வகை இனிப்பூட்டிகள் காலப் போக்கில் மூளையின் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது” என்று பிரேசில் சா போலோ (São Paulo) பல்கலைக் கழக விஞ்ஞானியும் ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான கிளாடியா கிமிஸுமோட்டோ (Claudia Kimie Suemoto) கூறுகிறார். என்றாலும் இந்த கண்டுபிடிப்பு பற்றி உணவு மற்றும் பானங்கள் தொழிற்துறை சந்தேகங்களை எழுப்பியுள்ளன. “இந்த ஆய்வு அறிவாற்றலில் ஏற்படும் பாதிப்பு களுக்கான காரணங்களை கூறவில்லை. சர்க் கரை இல்லாத இனிப்புகள் பாதுகாப்பான வை என்று உலகில் எல்லா முன்னணி ஆரோக்கியத் துறையினரும் கூறுகின்றனர். இதனால் இவை பலவகை உணவு கள், மருந்துகள், பல் மருத்துவத்துறை, பானங்கள் உற்பத்தித் தொழிலில் பல ஆண்டு களாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. மென்பானங்கள் தயாரிப்பில் இவற்றின் பயன்பாட்டால் யு கே உற்பத்தியாளர்கள் 2015 முதல் பில்லியனில் கால் பகுதி சர்க்கரை உபயோகத்தைக் குறைத்துள்ளனர்” என்று பிரிட்டிஷ் மென்பானங்கள் சங்க இயக்குனர் ஜெனரல் கவின்  பார்ட்டிங்டன் (Gavin Partin gton) கூறுகிறார். சர்க்கரையின் அளவைக் குறைத்தால் இனிப்பூட்டிகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்கனவே அறிவியல் ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறை கள் உள்ளன.  இந்த ஆய்வு உற்றுநோக்கல் களின் அடிப்படையில் நடந்துள்ளது. இது புள்ளி விவரங்களுடன் மட்டுமே தொடர் புடையது. பாதிப்புகளுக்கான காரணம் மற்றும் நேரடித் தொடர்புகளை இந்த ஆய்வு எடுத்துக் கூறவில்லை. இனிப்பூட்டிகளின் நுகர்வு மற்றும் அறிவாற்றலில் ஏற்படும் குறைவு ஒன்றி னால் மற்றொன்று ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை என்று சர்வதேச இனிப்பூட்டிகள் சங்கம் (International Sweeteners Association (ISA)) கூறுகிறது. சர்க்கரையின் அளவைக் குறைப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு உதவுவது போலவே செயற்கை இனிப்பூட்டும் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.