articles

img

கோப்பை: நாட்டுக்கா? கோவிலுக்கா?

கோப்பை: நாட்டுக்கா? கோவிலுக்கா?

விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது கோடிக்கணக்கான மக்களின் உணர்ச்சிகளை ஒரே நூலில் இணைக்கும் ஒரு உலக மொழி. ஒரு மாவட்ட, மாநில எல்லைகளைக் கடந்து, நாடுகளுக்கிடையே நட்பையும் மரியாதையையும் உருவாக்கும் அரிய மேடையாக விளையாட்டு திகழ்கிறது. ஒரு கோப்பை வென்றதும் மக்கள் தெருக்களில் ஆடிப் பாடி மகிழ்கிறார்கள். அந்த வெற்றியின் பின்னால் இருக்கும் உண்மைக் காரணம் வீரர்களின் கடுமையான  உழைப்பு, வலிகளையும் தோல்விகளையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதி. ஒருவருக்கொருவர் தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் அணித் துணை உணர்வு ஆகியவையே.  ஆனால், 2026 டி 20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒரு கேள்வி எழுந்தது. கோப்பையை வென்ற மறுநாள் விடியற்காலை, அந்தக் கோப்பையை யார் ஏந்திக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பதுதான். நுழைக்கப்படும் அரசியல் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் , தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் அகமதாபாத் அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். கழுத்தில் மாலை, கையில் கோப்பையு டனான அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவியது. ஒரு நிமிடம் நின்று யோசிப்போம் ஒரு வீரர் தன் தெய்வத்தை நம்புவது அவரது தனிப் பட்ட விஷயம். நாட்டின் பல பகுதிகளில் பல மதங்களைச் சேர்ந்த ரசிகர்கள் தங்கள் அணியின் வெற்றிக்காக கோயில் களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், குருத்வாராக்களிலும் பிரார்த்தனை செய்வது இயல்பான மனித உணர்வு. ஆனால் பொது பதவிகளில் இருப்ப வர்கள் அந்த நம்பிக்கையை எந்த வடிவில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியமான கேள்வி. பதவியும் பக்தியும் கம்பீரும் ஜெய் ஷாவும் வெறும் தனி நபர்களல்ல. கம்பீர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலிருந்து வந்தவர்; அந்தக் கட்சி ராம-அனுமன் அரசியலை தன் மூலத னமாகக் கொண்டு இயங்குகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜெய் ஷா ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தத் தொகுதியின் மகன். ஒருவர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர். மற்றொருவர் உலக கிரிக் கெட்டின் முக்கிய நிர்வாகப் பதவியில் இருப்பவர். இப்படிப்பட்ட பொதுப் பொறுப் பில் இருக்கும் நபர்கள் தேசிய அணி யின் வெற்றியை ஒரு குறிப்பிட்ட மதத் தின் கோவிலில் கொண்டாடி, அதனை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் போது கேள்வி எழுகிறது. இது தனிப்பட்ட பக்தியா? அல்லது ஒரு அரசியல் குறியீடா?. மதச்சார்பற்ற நாட்டில் இது இயல்பான ஜனநாயகச் சிந்தனை. விளையாட்டு உலகில் மூடநம்பிக்கைகள் புதிதல்ல. சில வீரர்கள் அதிர்ஷ்டம் என ஜெர்சி அணிவார்கள். சிலர் மைதானத்தில் வலது காலை முதலில் வைப்பார்கள். ரசிகர்களுக்கே கூட “நான் இந்த இருக்கையில் உட்கார்ந்தால் தான் நம்ம அணி ஜெயிக்கும்” என்ற நம்பிக்கைகள்கூட இருக்கும். இவை அனைத்தும் மனித மனத்தின் ஒரு பகுதி. அறிவியல் ஆதாரம் இல்லாவிட்டாலும் அவை சிலருக்கு மனநம்பிக்கையை அளிக்கின்றன. சமீபத்தில் கூட ஒரு சம்பவம் பேசப்பட்டது. மார்ச் 3, 2026 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருந்த பயிற்சி, சந்திர கிரகணம் காரணமாக சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. தனிப்பட்ட நம்பிக்கையை நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள் பொது மேடையில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக நிறுவும்போது, அது வேறு ஒரு கேள்வியை எழுப்புகிறது. வெற்றியின் உண்மையான கதை இந்த உலகக் கோப்பை இந்திய அணிக்குப் பெரிய வெற்றியைத் தந்திருக்கலாம். ஆனால் அந்த வெற்றியின் உண்மையான கதை கோவில்களில் எழுதப்படவில்லை; மைதானத்தில்தான் எழுதப்பட்டது. பல ஆண்டுகளாக திறமை இருந்தும் வாய்ப்புக் கிடைக் காமல் காத்திருந்த சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபித் தார். அவரது அமைதியான போராட்டம் அணிக்குப் பெரிய பலமாக அமைந்தது. பந்து வீச்சில் இந்திய அணியின் முக்கிய ஆயுதமாக இருந்தவர் ஜஸ்பிரித் பும்ரா. அவருடன் சேர்ந்து பந்து வீச்சை கட்டுப்படுத்தியதும், முக்கிய தருணங்களில் அற்புதமான கேட்சுகளை பிடித்ததும் அக்சர் பட்டேல். ஒரு போட்டியின் திசையை சில ஓவர்களே மாற்றி விடும். அந்த தருணங்களில் வேலை செய்தது வீரர் களின் திறமை, பயிற்சி மற்றும் அணியின் ஒற்றுமை. இதைக் காணும்போது ஒரு உண்மை தெளிவாகிறது. வெற்றியை உருவாக்குவது கோவில்கள் அல்ல. களத்தில் வீரர்களால் சுழலும் பந்தும் மட்டையும்தான். எழும் சில கேள்விகள் இந்திய அணி இமாலய இலக்கான 255 ரன்களை எடுக்க உதவியது யார்? பும்ரா வீசிய யார்க்கரை அனுமன் தானா வீசினார்? பறந்து கேட்ச் பிடித்தது பட்டேலா… ராமரா? கோப்பையை வென்ற பின் தெய்வங்களுக்கே கீர்த்தி கொடுத்தால், அடுத்த போட்டியில் தோற்றால் யாரை குறை சொல்லப் போகிறோம்? உலகக் கோப்பை வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களுடையது.‌அந்த மக்களில் சிலர் அனுமனை வழிபடு கிறார்கள். சிலர் அல்லாஹ்வை வணங்குகிறார்கள். சிலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். சிலர் எந்த தெய்வத்தையும் நம்பாமல் தங்களின் உழைப்பையே மூலதனமாகக் கருது கிறார்கள்.  இந்திய அணி மக்கள் அனைவருடைய அணி. அதன் வெற்றியை ஒரு மதத்தின் சடங்கு டன் பொதுவாக இணைத்துக் காட்டுவது தேவை யற்றது. விளையாட்டு மனிதத் திறமையின் மிகச் சிறந்த வெளிப்பாடு. அது அறிவியல், பயிற்சி, தந்திரம், மன உறுதி மற்றும் அணித்துணை உணர்வு ஆகிய வற்றின் கூட்டுச் சேர்க்கை. அதை மத அரசியல் அல்லது மூடநம்பிக்கையின் மேடையாக மாற்று வது தேவையற்றது.  வெற்றி வந்தால் வீரர்களை பாராட்டுவோம். அவர்கள் உழைப்பை மதிப்போம். கோப்பை யை தூக்கி நிற்கும் அந்த தருணம் எந்த கோவி லின் அருளில் அல்ல; அது மனித முயற்சியின் வெற்றி. கோப்பையை வென்றோம் அது பெருமை. ஆனால் அந்தக் கோப்பையை ஒரு கோவிலின் சொத் தாக அல்ல, ஒரு நாட்டின் பெருமையாக வைத் துக் கொள்வதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது.