சேலம் மாவட்டத்தில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள சூளைமேடு பகுதியில், ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தையும் இருசக்கர வாகனத்தையும் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 மாத குழந்தை உட்பட மேலும் 3 பேரும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
