world

img

அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!

அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கையில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
ஈரான் போரில் ஈடுபடும் 2 அமெரிக்க விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது மார்ச் 4ஆம் தேதி, 8 ஆகிய தேதிகளில் கப்பல்-எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டுவந்த 2 அமெரிக்க போர் விமானங்களை அனுமதிக்கவில்லை என வர் தெரிவித்தார்.
மேலும் பல அழுத்தங்கள் இருந்தபோதிலும் எங்கள் நடுநிலை நிலைப்பாட்டைத் தொடர விரும்புகிறோம். எங்களால் எந்த அழுத்தத்திற்கும் இடங்கொடுக்க முடியாது. மத்திய கிழக்கு போர் சவால்களை ஏற்படுத்தினாலும், எங்களின் நடுநிலையை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்வோம்,என வர் தெரிவித்துள்ளார்