tamilnadu

ஏபிடி நிறுவன ஊழியர்களுக்கு போனஸ்

ஏபிடி நிறுவன ஊழியர்களுக்கு போனஸ்

கோவை, அக்.17- ஏபிடி நிறுவன ஊழியர்களுக்கான போனஸ் உடன்பாடு எட்டப்பட்டது.  கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏபிடி பார்சல் சர்வீஸ்  நிறுவனம் தென்னிந்திய முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவ னத்தில், பணிபுரியும் ஊழியர்களுக்கான போனஸ் குறித்து, தலைமை அலுவலகத் தில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 10 சதவீதம் போனஸ் வழங்க நிர்வாக தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. வரும் 18 ஆம் தேதிக்கு முன்னதாக போனஸ் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்ப டும் என ஏபிடி நிர்வாகம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் சிஐ டியு சார்பில் தலைவர் எம்.அருணாச்சலம், பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், பொரு ளாளர் கே‌.செவந்தியப்பன், துணை பொதுச்செயலாளர் ஜெ‌.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். முன்ன தாக நிர்வாகத்தின் தரப்பில், மனித வள  மேலாளர் செல்லமுத்து, சீனியர் மனித வள மேலாளர் பி.சண்முகநாதன், இளநிலை  மேலாளர் நாராயணன், மேலாளர் பழனிச் சாமி ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங் கேற்று கையெழுத்திட்டனர்.