தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளில் உடல் தானம்
விருதுநகரில் 50 பேர் ஒப்புதல் படிவம்
விருதுநகர், செப்.12- தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் செப்டம்பர் 12 அன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப் பட்டது. சிபிஎம் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் பேர் உடல் தானம் செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உறுதியேற்பு நிகழ்ச்சி மற்றும் உடல்தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விருதுநகரில் எம்.ஆர்.வி. நினைவ கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் அ.குரு சாமி விளக்கிப் பேசினார். பின்பு, 50 பேர் உடல் தானம் செய்வதற்கான படிவங்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங்கி டம் வழங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், பி.என்.தேவா, வி.முருகன், கே.முருகன், எம்.சுந்தரபாண்டியன், மூத்த தோழர் எஸ்.பால சுப்பிரமணியன், சமூக ஆர்வலர் எம்.ஊர்காவலன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.நேரு, எம்.ஜெயபாரத் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. உள்பட 100 பேர் உடல் தான உறுதியளிப்பு
திண்டுக்கல், செப்.12 மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. உள்ளிட்ட நூறு பேர் தங்களது உடலை தானம் செய்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தனது இணையர் கவிதாவுடன் வந்து உடல் தானம் செய்தார். இதே போல் மூத்த தலைவர்கள் வி.குமரவேல் அவரது இணையர் ஷியாமளா, காந்தி அவரது இணையர் அமுதவள்ளி, சரத், அவரது இணையர் லீலா, பாக்கியம், அவரது இணையர் திருமலைச்சாமி, கிருஷ்ணமூர்த்தி அவரது இணையர் பொன்மதி, தாமோதரன் இணையர் வாசுகி, செல்வகணேசன் இணையர் சுமதி, முரு கேசன் இணையர் பழனியம்மாள், சபரீஸ்வரன் இணையர் தாரணி, ராம்குமார் இணையர் காயத்திரி ஆகிய 12 இணையர்கள் உள்ளிட்ட 100 பேர் உடல் தானம் செய்தனர். இந்த நிகழ்விற்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தலைமை வகித்தார். சிபிஎம மாநகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது வரவேற்றார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் பி.வீரமணி, துணை முதல்வர் மருத்துவர் கீதாராணி, உடற்கூராய்வியல் துறை மருத்துவர் ஜெயமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றியச்செயலாளர் ஆர்.சரத்குமார் நன்றி கூறினார்.