tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில், ரத்ததான முகாம்; கருத்தரங்கம்

வாலிபர் சங்கம் சார்பில், ரத்ததான முகாம்; கருத்தரங்கம்

கோவை, செப்.28- பகத்சிங் பிறந்தநாளை முன் னிட்டு, வாலிபர் சங்கம் சார்பில்  ரத்ததான முகாம், கொடிநாள் மற் றும் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில், பகத்சிங் பிறந்தநாள் மற்றும் வாலிபர் சங்கம் மாநில  மாநாட்டையொட்டி, ஞாயிறன்று பெரியநாயக்கன்பாளையத்தில்  ரத்ததான முகாம் நடைபெற்றது. கோவை அரசு மருத்துவமனையு டன் இணைத்து நடத்திய இம் முகாமில், 52 பேர் ரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்விற்கு ஒன்றி யத் தலைவர் கே.ஆர்.தண்ட பாணி தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ந.ராஜா, மாவட்டச் செயலாளர் தினேஷ்ராஜா, ஒன்றி யச் செயலாளர் பிரகதீஸ்வரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். கோகுல கிருஷ்ணன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். இதேபோன்று, வாலிபர் சங்க  கோவை மாவட்டக்குழு அலுவல கத்தில் வெண்கொடி ஏற்றி கொண் டாடப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்டச் செயலா ளர் தினேஷ் ராஜா, துணைத் தலை வர் முத்து முருகன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சிங்கை,  பீளமேடு உள்ளிட்ட கமிட்டிகளிலும்  பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. தருமபுரி தருமபுரி மாவட்டம், பாலக் கோடு பேருந்து நிலையம் அருகே  திறந்தவெளி கருத்தரங்கம் சனி யன்று மாலை நடைபெற்றது. வாலி பர் சங்க மாவட்ட துணைச்செயலா ளர் வி.ரவி தலைமை வகித்தார். ‘மாவீரன் பகத்சிங் கனவுகள்’ என்ற  தலைப்பில் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ‘இந்திய விடுதலை போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் வழக்கறி ஞர் பி.கோவிந்தசாமி ஆகியோர் பேசினர். மாவட்டத் தலைவர் ம. குறளரசன், நகரத் தலைவர் எஸ். அருள்குமார், செயலாளர் அலெக் சாண்டர், பொருளாளர் புவனேஸ் வரி, காரிமங்கலம் வட்ட நிர்வாகி கள் கார்த்திக், அஜித் குமார், மீரா  உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.