tamilnadu

img

காந்தி சிலைக்கு காவித்துண்டு; களங்கப்படுத்திய பாஜகவினர்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு; களங்கப்படுத்திய பாஜகவினர்!

மதுரை, அக். 2- மதுரையில் காவித் துண்டு அணிவித்து காந்தி சிலையை பாஜகவினர் களங்கப்படுத்தினர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஒற்றுமை யை வலியுறுத்தும் அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய பிர முகர்கள் வியாழனன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்நிலையில் பாஜக சார்பில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட பாஜக-வினர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன் என்ற பெயரில் வந்து, மாலையோடு சேர்த்து காவித்துண்டையும் அணிவித்து களங்கப்படுத்தி னர். பாஜகவினர் காந்தி சிலைக்கு காவித்துண்டு அணி வித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வெளியாகின. இதற்கு கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து, காந்தி அருங்காட்சியக பணியாளர்கள் காந்தி சிலையில் இருந்த காவித்துண்டை அகற்றினர். காந்தி அருங்காட்சியகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.