குறைப் பிரசவங்களைக் குறைக்க வழங்கப்படும் சிகிச்சைகளின் பலன்கள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு
புதுதில்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் குறைப் பிரசவங்களைக் குறைக்கும் வகையில் வழங்கப்படும் சிகிச்சைக ளின் பலன்கள் மற்றும் அதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான நாடு தழுவிய ஆய்வைத் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பக் காலத்தின் 37 வாரங்களுக்கு முன்பா கவே குழந்தைகள் பிறப்பது ‘குறைப் பிரசவம்’ எனப்படுகிறது. இத்தகைய குழந்தைகள் 2.5 கிலோவுக்கும் குறைவான எடையுடன் பிறக்கின்றனர். இது பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது. அத்துடன், குறைப் பிரசவத்தால் பிறக்கும் குழந்தைக ளுக்கு உடல்ரீதியான, நரம்பியல் வளர்ச்சி சார்ந்த, சமூகப் பொருளாதாரப் பாதிப்புகள் நீண்டகாலத்திற்கு நீடிக்கும். இந்தியாவில் ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான குறைப் பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. இது உலக அளவில் பிறக்கும் குறைப் பிரசவக் குழந்தைகளில் 20 சதவீதத்துக்கும் அதிகம் என்பதுடன், உலகிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்தகைய குறைப் பிரசவங்கள், பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கு (பிறந்த 28 நாட்க ளுக்குள் ஏற்படும் இறப்பு) முக்கியக் காரணமாக இருக்கின்றன என உலக சுகாதார நிறுவனம் (WHO) 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தான் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் இறப்பைக் குறைப்ப தற்காகப் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்க ளின்படி, குறைப் பிரசவத்தைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வரும் சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுத் திட்டங்களைத் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆய்வில், குறைப் பிரசவம் நடக்க வாய்ப்புள்ள கர்ப்பிணிப் பெண்களுக்குச் செலுத்தப்படும் கர்ப்பக்கால கார்டிகோ ஸ்டீராய்டுகள் (steroid), பச்சிளம் குழந்தை க்குக் குழாய் மூலம் ஆரம்பத்திலேயே உணவு ஊட்டுவது, மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு உள்ளிட்ட சிகிச்சைகளின் பலன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. 2014 ஆம் ஆண்டு உயிருடன் பிறக்கும் 1,000 பச்சிளம் குழந்தைகளில் 26 குழந்தைகள் இறந்த நிலையில் 2020 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 20 ஆகக் குறைந்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.