tamilnadu

img

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் தடை

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க மீண்டும் தடை

தருமபுரி, அக்.22- காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்  கனமழை பெய்து வரும் நிலையில்,  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரித்துள்ளதால் அருவிக ளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மீண்டும் தடை  விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ் நாட்டில் காவிரி நீர்பிடிப்பு பகுதிக ளில் பலத்த மழை பெய்து வந்தது. இத னால் காவிரி ஆற்றின் கிளை ஆறான  தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கர்நாடக  மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப் புப் பகுதிகளில் மழை பெய்து வரு வதாலும், அங்குள்ள அணைகளிலி ருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதி கரித்துள்ளது. அதன்படி, ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து செவ்வாயன்று காலை விநாடிக்கு 24,000 கனஅடி யாகவும், பிற்பகல் 28,000 கனஅடி யாகவும், மாலை 32,000 கனஅடியாக வும் அதிகரித்தது. கடந்த இரு தினங் களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் பிரதான அருவி,  சினி அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, பெரியபாணி உள்ளிட்ட அருவிக ளில் தண்ணீர் ஆா்ப்பரித்துக் கொட்டி  வருகிறது. இதனால், ஒகேனக்கலிலுள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள்  குளிப்பதற்கும், பரிசல் பயணம்  மேற்கொள்வதற்கும் செவ்வாயன்று  முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், பிரதான அரு விக்கு செல்லும் நுழைவாயில் மற் றும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கப் படும் சின்னாறு பரிசல் துறை வரு வாய் துறையினரால் பூட்டப்பட்டுள் ளது. தொடர்ந்து, நீர்வரத்து 32 ஆயி ரம் கனஅடியாக தொடர்வதால், விதிக்கப்பட்டுள்ள தடை புத னன்றும் தொடர்ந்தது.