தீண்டாமைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர், ஆக.20 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் 5 ஆவது மாநில மாநாடு மயிலாடு துறையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதனை யொட்டி தீண்டாமைக்கு எதிராகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகின்றன. அதனொரு பகுதியாக, கரூர் மாவட்டத் திற்கு வருகை தந்த கலை குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் நடை பெற்ற கலை நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டத் தலைவர் கெ.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.முத்துச் செல்வன் வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், எல்ஐசி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஒன்றியத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே. கந்தசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகே சன், சி.ஆர்.ராஜாமுகமது, ஒன்றியச் செயலா ளர் குமரவேல், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ப.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். பொது மக்கள் மத்தியில் தீண்டாமைக்கு எதிரான கலை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.