tamilnadu

img

தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள்: மாருதி சுசுகியுடன் ஒப்பந்தம்

தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள்: மாருதி சுசுகியுடன் ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் 2023-24-இல் போக்குவரத்துத் துறை  அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, மாநிலத்தின்  20 பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் கணினி வசதியுடன் கூடிய தானியங்கி ஓட்டுநர்  தேர்வு மையங்களை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மாருதி சுசுகி இந்தியா லிமிடெட், தமது நிறுவன சமூகப்  பொறுப்பு திட்டத்தின் கீழ், தற்போதுள்ள வழக்க மான ஓட்டுநர் தேர்வு மையங்களை தானியங்கி யாக மாற்ற முன்வந்துள்ளது. முதற்கட்ட மாக, 2025-26 நிதியாண்டில் 10  பிராந்திய போக்குவரத்து அலுவல கங்களில் தானியங்கி மையங்கள் உருவாக்கப்படும். தமிழக அரசு மற்றும் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு இடை யிலான ஒப்பந்த நினைவு அறிக்கை சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.  எஸ். சிவசங்கர் முன்னிலையில் கை யெழுத்திடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் முதன் மைச் செயலாளர் (உள்துறை) தீரஜ்குமார், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர். கஜலட்சுமி மற்றும் போக்கு வரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவ னத்தைச் சார்ந்த தருண் அகர்வால், மூத்த துணைத் தலைவர் ஆர். கல்யாணசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.