tamilnadu

சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு

சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்ட அரங்கில், சனிக் கிழமை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சியர் சங்கர் மற்றும்  அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர்கள் பழ.அன்புமணி, ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலா ளர்கள் சி.ஏ.சந்திர பிரகாஷ், ராதிகா,  ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் பழனி வேல் ராஜன், ஒன்றியச் செயலாளர் மதியழகன், ஒன்றியப் பொருளாளர் சிவ குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணன் மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வேறொரு மாற்றுத்திறனாளிகள் சங்கத் தைச் சேர்ந்த சிலர், குறைதீர் கூட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து  கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி கள் அல்லாத சங்க நிர்வாகிகள் கலந்து  கொள்ளக்கூடாது என பிரச்சனை செய்த னர். மாற்றுத்திறனாளிகள் பிரச்ச னையை, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே புரிந்து கொண்டு, அதுகுறித்து பேச முடியும் என வாக்குவாதம் செய்த னர். இதையடுத்து பி.எம். இளங்கோ வன், பழ.அன்புமணி உள்ளிட்டோர், “அப்படியானால் குறை கேட்கும் அலு வலர்களும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் தானே, அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளின் குறைபுரியும்” என வாதம் எழுப்பினர். இதற்கான சரியான பதிலை வாக்கு வாதம் செய்த, எதிர்த்தரப்பு மாற்றுத்திற னாளிகள் சங்க நிர்வாகிகள் சொல்ல முடியாமல் இருந்த நிலையில்,  அங்கிருந்த அலுவலர்கள், தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின், மாற்றுத்திறனாளிகள் அல்லாத மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து விட்டு வெளியில் செல்ல லாம்” என்று தெரிவித்தனர்.  இந்நிலையில் மாற்றுத்திறனாளி கள் 10-க்கும் மேற்பட்டோர், “எங்கள் குறைகளை சங்க நிர்வாகிகள் தெரி விக்க அனுமதி மறுப்பதைக் கண்டித்து  வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறி  சங்க நிர்வாகிகளுடன் வெளிநடப்பு செய்தனர்.  குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற, மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகி களை வெளியேறச் சொன்ன, தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளது.