பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை அசாம் பாஜக அரசு கைவிட வேண்டும்
15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை
புதுதில்லி, ஆக. 21 - ‘தி வயர்’ ஊடக நிறுவனத்துடன் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் களான சித்தார்த் வரதராஜன், கரண் தாப்பர் உள்ளிட்டோர் மீது அசாம் காவல்துறை யின் துன்புறுத்தலை கண்டித்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்ட றிக்கை வெளியிட்டுள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS - Bharatiya Nyaya Sanhita) பிரிவு 152-இன் கீழ் இந்த பத்திரிகையாளர்கள் மீது பல குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஆயுட்கால சிறைத்தண்டனை வரை விதிக்கக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், அசாம் அரசு சம்மன் வழங்கியிருப்பது, பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நேரடியான தாக்குதல் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அசாமில் ஆளும் பாஜக அரசானது, காலாவதியான தேசத்துரோக சட்டத்தை புதிய வடிவத்தில் தவறாகப் பயன்படுத்தி, சுதந்திரமான குரல்களை பயமுறுத்தவும் விமர்சனங்களை மவுனமாக்கவும் முயல்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். “இந்த செயலை நாங்கள் கடுமையாக கண்டித்து, இதன் திரும்பப் பெறுதலை கோருகிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறை உடனடியாக தவறான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு எதிராக பிரிவு 152 பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கூட்டறிக்கையில், ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ. ரஹிம், வி. சிவதாசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங், ரேணுகா சவுத்ரி, முகுல் வாஸ்னிக் (காங்கிரஸ்), திருச்சி சிவா (திமுக), ராம்கோபால் யாதவ், ஜெயா பச்சன், (சமாஜ்வாதி) மற்றும் சக்திசின் கோஹில், சயீத் நசீர் உசைன், ஜாவேத் அலிகான், ஆர். கிரிராஜன், அனில் குமார் யாதவ் ஆகியோர் கையெழுத் திட்டுள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான இந்த கூட்டு முயற்சி பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒற்றுமை யை பிரதி பலிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.