tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில்  செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயம்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவுப் பாடம்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொறியியல் இளங்கலை படிப்புகளில் உள்ள பாடங்களில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயமாக அறிவிக்கப் பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் டேட்டா சயின்ஸ், இயந்திர கற்றல், தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், வாழ்க்கைத்  திறன்கள், உடற்கல்வி பாடங்களும் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளி லும் இந்த புதிய பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம் வேலைவாய்ப்பு மற்றும்  மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் வரி விதிப்பு தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பு தாக்குதல் நடத்தி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பிறகு,  டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதியாகும் வெளிநாட்டு பொருட்கள் மீதான வரி விகிதங்களை கற்பனை செய்ய  முடியாத அளவில் உயர்த்தியுள்ளார். இந்தியாவில் இருந்து  அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சத விகிதம் கூடுதல் வரியும், அபராதமாக 25 சதவிகிதமும் என  மொத்தம் 50 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பால் இந்தியா 4 ஆயிரத்து 820 கோடி  டாலர் மதிப்புள்ள வணிக வாய்ப்பை இழக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. ஜவுளி, ஆபரணங்கள், இறால், தோல், காலணி, மின்சார சாதனங்கள் போன்ற தொழில்கள் கடு மையாக பாதிக்கும்” என எச்சரித்துள்ளார். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்பட தமிழ் நாடு முழுவதும் இந்த வரிவிதிப்பால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு பொருத்தமான மாற்று திட்டங்களையும் வரிச் சலுகை களையும் உருவாக்க வேண்டும் என இரா. முத்தரசன் வலி யுறுத்தியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: 3 லட்சம் பேர் பயணம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை யில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) முக்கிய சந்தைகளில் விற்பனை களைகட்டியது. விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வ மாக வாங்கிச் சென்றனர்.  விடுமுறையையொட்டி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதனால், சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாத வரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு வந்தவர்களுக் காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாரத்தின் இடையில் விநாயகர் சதுர்த்தி வந்த போதும், அதைத் தொடர்ந்து சுபமுகூர்த்த தினம் இருப்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் பங்கேற்பதற்காக பலரும் விடுப்பு எடுத்து புறப்பட்டனர். சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கள் மூலம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்த னர். எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங் களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இங்கிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங் களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அரசுப் பேருந்து, ரயில், ஆம்னி பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மூலம் சுமார் 3 லட்சத் துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் சென்றனர்.

கனமழை எச்சரிக்கை!

சென்னை: கோவை, நீலகிரி மாவட்ட மலைப் பகுதி களில் ஆக. 28, 29 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல செப்டம்பர் 2  வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி,  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

நாகரிகமாக பேச வேண்டும்!

சென்னை: முன் னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாள ரு மான ஓ. பன்னீர்செல்வம்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுகவிருந்து பிரிந்து  சென்றவர்கள் அனை வரும் ஓரணியில் சேர்ந் தால் மட்டுமே தமிழ கத்தில் அதிமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவா கும். அரசியல் கட்சியை நடத்துபவர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனை வரும் நாகரிகம் கருதி பேச வேண்டும். அந்த  அடிப்படையில், விஜய் யின் பேச்சில் சில கருத் துக்கள் ஏற்புடையதல்ல” என்றார்.

அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழ் நாட்டில் 6 மற்றும் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம் பர் 15 முதல் 26 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு அட்ட வணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, செப்.  10 முதல் 25-ஆம் தேதி  வரை தேர்வு நடைபெறு கிறது.

காங்கிரஸ் மாநில மாநாடு

சென்னை: வாக்கு  திருட்டு குறித்து மக்க ளுக்கு விளக்கும் வகை யில் செப்டம்பர் 7 அன்று திருநெல்வேலியில் மாநில மாநாடு நடைபெ றும் என்றும் இம்மாநாட் டில் அகில இந்திய தலை வர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வா கிகள் பங்கேற்க உள்ள தாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அறிவித்து உள்ளார்.

எல்.முருகன் காமெடி

சென்னை: “இந்திய நாட்டில் மூன்றுமுறை ஒன்றிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் என்றால், அது  ஆர்எஸ்எஸ் அமைப்பு தான்; அந்த அமைப்பு சமூக சேவைக்கான இயக்கம்; அந்த இயக்கத் தின் கருத்துக்களை அதிமுக கேட்பது வரவேற் கத்தக்கது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து தவெக தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் ஒன்றிய இணை அமைச் சர் எல். முருகன் காமெடி செய்துள்ளார்.

கல்வி உரிமைச் சட்ட விண்ணப்ப  இணையதளத்தை முடக்கியது ஏன்?

அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித ஒதுக்கீட்டில் மாணவர்கள் விண்ணப்பிக்க வழி யில்லாமல் இணையதள பக்கத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளி களில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஏழை - எளிய மாணவர் களுக்கான சேர்க்கை இணையதள பக்கம் முடக்கப்பட்டு உள்ளதாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்வாகி வே. ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, தனியார் பள்ளிகள்  இயக்குநர், “ஒன்றிய அரசு தனது பங்களிப்பு நிதியான 60 சத விகிதத்தை ஒதுக்காததால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலவில்லை” என தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஏழை  - எளிய மாணவர்கள் விண்ணப்பிக்க வழியின்றி இணையதள  பக்கத்தை முடக்கி வைத்திருப்பது ஏன் என்றும், மாணவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு வறட்டுக் கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு இணையதள பக்கத்தை செயல் படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 9-க்கு தள்ளி வைத்தனர்.