tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை விளக்கி ஆக்கூர், மயிலாடுதுறையில் கலை பயணம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டை விளக்கி  ஆக்கூர், மயிலாடுதுறையில் கலை பயணம்

மயிலாடுதுறை, ஆக. 26-  மயிலாடுதுறையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு  நடைபெறவுள்ளதையொட்டி மாநாட்டை மக்களிடம் விளக்கும் விதமாக                                                                                                                                            `சாதியம் தகர்ப்போம், மனிதம் காப்போம்’ என்கிற கருத்தியலை முன் வைத்து சென்னைக் கலைக்குழு மேற்கொண்டு வரும் கலைப்பயணம் வெகு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக உடனுக்குடன் களம் காணும் இயக்கமாய் இருக்கிற, தீண்டாமை ஒழிப்பு முன்னணி `சாதியம் தகர்ப்போம், மனிதம் காப்போம்’ என்கிற கருத்தை முன்வைத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாடகவியலாளர் பிரளயன் தலைமையிலான சென்னை கலைக்குழுவினர், கலைப் பயணம் மூலம் நவீன வீதி நாடகத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர்.  ஆகஸ்ட் 15 ஆம்தேதி துவங்கிய இந்த கலைக்குழு பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் பேருந்து நிறுத்தம் அருகில் `பட்டாங்கில் உள்ளபடி’ மற்றும் நிலம் என்கிற இரு நாடகங்கள் நடைபெற்றன.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஏ. ரவிச்சந்திரன், கே.பி. மார்க்ஸ், மாவட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நாடக கலைஞர்களை பாராட்டி கதர் ஆடை அணிவித்தனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற நாடகத்தை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.