மாற்றுத்திறனாளிகள் சங்க அரூர் வட்ட மாநாடு
தருமபுரி, ஆக.30- மாற்றுத்திறனாளிகள் சங்க அரூர் வட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் தருமபுரி மாவட்டம், அரூர் வட்ட 6 ஆவது மாநாடு, தனியார் மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. வட்டத் தலைவர் கே.காந்தி தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை வி.மகேந்திரன் ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் தே.வில்சன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டச் செயலா ளர் ஜி.தமிழ்செல்வி, பொருளாளர் சக்தி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநில இணைச்செயலாளர் வி.பெரியசாமி, மாவட்டத் தலைவர் கே.ஜி.கரூரான், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.முத்து உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப் படியான 5 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அரூர் பேருந்து நிலையத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக கே. காந்தி, செயலாளராக சி.வேலாயுதம், பொரு ளாளராக எஸ்.எம்.சுந்தரமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலா ளர் எம்.மாரிமுத்து நிறைவுரையாற்றினார். ஜானகி நன்றி கூறினார்.
