tamilnadu

img

முட்புதரில் அழகான ஆண் குழந்தை ஆரணி காவல்துறையினர் மீட்பு

முட்புதரில் அழகான ஆண் குழந்தை ஆரணி காவல்துறையினர் மீட்பு

திருவள்ளூர், அக் 21- பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை முட்புதரில் வீசி விட்டுச் சென்றது யார்? என குழந்தையை மீட்டு ஆரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றி யம், ஆரணியில் இருந்து திருநிலை செல்லும் சாலையில் முட்புதர் ஒன்றில் செவ்வாயன்று (அக் 21), காலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட மக்கள் அங்கு சென்று பார்த்த போது தொப்புள் கொடி யுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக ஆரணி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு ஆரணி காவல் நிலைய  உதவி ஆய்வாளர்கள்  முரளிதாஸ், கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தலைமையில் காவல்துறையி னர் விரைந்து வந்தனர்.முட்புதரில் வீசிவிட்டுச் சென்றிருந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டனர். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை என்பதும் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது. அக்குழந்தையை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்குழந்தையின் தாயே சுயமாக பிரசவித்து தொப்புள் கொடியை அறுத்து வீசி விட்டு சென்று இருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகித்துள்ளனர். எனவே,சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அக்குழந்தையை வீசிவிட்டுச் சென்றது யார்? என காவல் துறையினர் விசா ரணை செய்து வருகின்றனர்.பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை முட்பு தரில் வீசப்பட்டு இருந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.