தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு
மேட்டுப்பாளையம், ஜூலை 1- மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணி ஓய்வுபெற்ற தூய்மைப் பணியா ளர்களுக்கு பாராட்டு விழா திங்களன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சியில் கடந்த 30 வரு டங்களாக கமலா, செம்பா, ரங்கம்மா, லோகிதாஸ், இந்திராணி, பல்லக்கா, லிங்கம்மா ஆகியோர் தூய் மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். ஒரே வார்டு பகுதியில் மட் டுமே நீண்ட வருடங்களாக பணியாற்றி யும், பொது மக்களிடம் நற்பெயரை எடுத் துள்ளனர். இந்நிலையில், அவர்கள் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, திங்களன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் சிஐடியு சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது. நகர்மன்றத் தலைவர் மெஹ ரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகராட்சி ஆணையர் அமுதா, சுகாதார ஆய் வாளர் ரவிசங்கர், நகர்மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு, நகர்மன்ற உறுப் பினர்கள் ரவிக்குமார், அனீஸ், பாத் திமா உட்பட பலர் கலந்து கொண்ட னர். சிஐடியு பொதுத்தொழிலாளர் சங் கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாராட் டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்த னர். தொடர்ந்து, தூய்மைப் பணியாளர் களை நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரபலி தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவர்களது வீட் டில் விட்டார்.