tamilnadu

img

ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி மேலாண்மை குழு சார்பாக பாராட்டு விழா

ஆரம்ப, உயர்நிலைப் பள்ளி  மேலாண்மை குழு சார்பாக  பாராட்டு விழா

நாகப்பட்டினம், செப். 18-  நாகப்பட்டினம், அழிஞ்சமங்கலம் அரசு ஆதின ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியை சா.சித்ரா, தமிழ்நாடு அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றதற்காக, ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவிற்கு, ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். அழிஞ்சமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.காந்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சத்யா பேசினார்.  ஆசிரியர் அன்புச்செல்வம் நன்றியுரை ஆற்றினார்.