2,538 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள்!
முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, ஆக.6- சென்னை வர்த்தக மையத்தில் புதன்கிழமை (ஆக.6) நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2,538 இளைஞர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ. அன்பரசன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணை களை வழங்கி முதலமைச் சர் பேசுகையில், “தமிழ்நாட் டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிக ரித்து இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொரு ளாதாரமாக திகழ்கிறது” என் றார். “இந்த வெற்றி தனிப்பட்ட சாதனை அல்லாமல், அமைச்சரவை, அதிகாரி கள், கடைநிலை ஊழியர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியின் விளைவு” என்று குறிப்பிட்ட முதல மைச்சர், “’எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கோடு பயணிக்கும் இந்த ஆட்சி யின் வெற்றிக்கான சான்று இது” எனவும் தெரிவித்தார். இன்னும் அதிக உயரத்தை அடைய 2.0-வில் பயணத்தை தொடர்வதாகவும் அறி வித்தார். வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு தேர்வாணையங்கள் மற்றும் அரசுத் துறைகள் மூலம், 1 லட்சத்து 8 ஆயிரத்து 111 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாகத் தெரி வித்தார். மேலும், ‘நான் முதல் வன்’ திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 393 இளைஞர்களுக்கும், தொழி லாளர் துறை மூலம் 2 லட்சத்து 65 ஆயிரத்து 223 பேருக்கும் வேலைவாய்ப்பு கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களுக் கான ஒதுக்கீடு மூலம் 84 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறி னார். மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரத்து 664 பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் பணி நியமனம் பெற்றுள்ளதாக அறிவித்த முதலமைச்சர், தொழில் வளர்ச்சி குறித்தும் விவரித்தார். 941 புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ள தாகவும், இதன்மூலம் 2 லட் சத்து 30 ஆயிரத்து 856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கல்வித் திட்டங்களின் வெற்றி குறித்தும் பேசிய முதலமைச்சர், “41 லட்சம் பேர், ‘நான் முதல்வன்’ திட் டத்திலும், 4 லட்சம் மாண வர்கள் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்திலும், 6 லட்சம் மாண வியர், ‘புதுமைப்பெண்’ திட்டத்திலும் பயனடைந் துள்ளதாகக் கூறினார். “கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்” என்று அறி வித்தார். இளைஞர்களிடம் உரை யாற்றிய முதலமைச்சர், “நாள்தோறும் உலகம் புதுப்பிக்கப்படுவதால் அதற் கேற்ப திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டு மென்றும், தேக்கநிலை கூடா தென்றும் அறிவுறுத்தினார்.