tamilnadu

img

நீதிபதி மீது காலணி வீசியதற்கு கண்டனம் கரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

நீதிபதி மீது காலணி வீசியதற்கு கண்டனம் கரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கரூர், அக்.16- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசியதை கண்டித்தும், காலணி வீசிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கெ.சக்திவேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் இரா.முத்துச்செல்வன், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாநிலத் துணைத் தலைவர் வி. கல்யாணசுந்தரம், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் சி.முருகேசன், ஜி.தர்மலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.