tamilnadu

img

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, ஆக.13 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையா ரில் த.பே.மா.லு கல்லூரி, வணிகவியல் துறை, நாட்டு நலப் பணி திட்டம், பொறை யார் - தரங்கம்பாடி லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேர ணிக்கு முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தரங்கம்பாடி வட்டாட் சியர் சதீஷ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பொறையார் காவல்  ஆய்வாளர் அண்ணாதுரை, வணிகவியல் துறை தலைவர் முனைவர் சேவியர் செல்வக் குமார், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜான் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சர்ச் தெரு, கடுதாசிப் பட்டறை, அரண்மனைத் தெரு, மெயின்ரோடு, பழைய பேருந்து நிலை யம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்த டைந்து பேரணியை நிறைவு செய்தனர்.  இப்பேரணியில் நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், லயன் சங்க நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், வருவாய்த்துறை, காவல்துறையினர் கலந்து கொண்டனர். நிறைவாக பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள்  தலைமையாசிரியர் ஜான் சைமன் மகி பாலன் நன்றி கூறினார்.  முன்னதாக கல்லூரி கலையரங்கில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான  விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.