tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் பேரவை: நிர்வாகிகள் தேர்வு

அங்கன்வாடி ஊழியர் பேரவை: நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, அக்.10- தனியார் மய திட்டத்தைக் கைவிட வேண்டும் என அங்கன் வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம், வியாழனன்று ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் ராதா மணி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன் துவக்கவுரை யாற்றினார். மாநிலப் பொருளா ளர் தேவமணி சிறப்புரையாற் றினார். மாநில துணைத்தலை வர் மணிமாலை, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், அங்கன்வாடி  ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண் டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி திட் டத்துக்கு நிதிக்குறைப்பை தவிர்க்க வேண்டும். தனியார் மய கொள்கையை கைவிட  வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடந்து, சங்கத் தின் மாவட்டத் தலைவராக எஸ். ராதாமணி, செயலாளராக எஸ். சாந்தி, பொருளாளராக சுசீலா மற்றும் 6 உதவித்தலைவர்கள், 6 இணைச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், மாநில செயற்குழு உறுப் பினர் பூங்கொடி நன்றி கூறி னார்.