tamilnadu

img

அங்கன்வாடி மையங்கள்: தினமலர் செய்திக்கு அரசு விளக்கம் சென்னை: தமிழ்

அங்கன்வாடி மையங்கள்:  தினமலர் செய்திக்கு அரசு விளக்கம் சென்னை

சென்னை: தமிழ் நாட்டைப் பொறுத்த வரைக்கும், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 54,483  குழந்தைகள் மையங்கள் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் அனைத்து பகுதி களையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்  திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்க னவே அங்கீகரிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் எண்ணிக் கைக்குள், தேவையான இடத்திற்கு இடமாற்றம் செய்து கொள்ள ஒன்றிய அரசு 1.2.2014 தேதியிட்ட கடிதத்தில், மாநில  அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தினமலர் நாளிதழில், “தமிழ்நாடு முழுவதும்  அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத தால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் எனவும்,  இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு உள்ளன” என வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி பெயர் தவிர்ப்பு சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் புதிய நிர்வாகி நியமன அறிவிப்பு லெட்டர் பேட்டில், அன்புமணி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக ராமதாஸ் லெட்டர் பேட்டில்,  நகல்கள் என செயல் தலைவர் அன்புமணி பெயர் இருக் கும். ஞாயிறன்று வெளியான நியமன அறிவிப்பில் அன்பு மணிக்கு நகல் அனுப்பப்படவில்லை.