கரூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், செப். 23- தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். இந்திய விவசாயத்தையும், விவசாயிகள் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் இங்கிலாந்தின் சிஇடிஏ ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் எஸ்கேஎம் சார்பில், கருப்பு கொடி ஏந்தி, கரூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழ அப்பாசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் சி.ஆர். ராஜாமுகமது, கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப.சரவணன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.தனபால், எஸ்கேஎம் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வடிவேலன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் பால்ராஜ், எல்எல்எப் மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன் ஆகியோர் உரையாற்றினர்.
