tamilnadu

img

அனைத்து திட்டங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும்: துணை முதல்வர் அறிவுறுத்தல்

அனைத்து திட்டங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும்: துணை முதல்வர் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம், செப்.11-- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த  ஆய்வு கூட்டம் செவ்வாயன்று (செப்.9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புத் திட்டங்க ளான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி,  சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், முக்கியமான திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து மட்டுமே இன்றைக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து திட்டங்களையும் காலம் தாழ்த்தாமல் திட்டத்திற்கான குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டார். இந்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆர்.காந்தி,  சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர் மரு. ச. உமா, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மேயர்   எம்.மகாலட்சுமி யுவராஜ் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.