அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2ஆவது சுற்றில் அல்காரஸ்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ் லாம் மற்றும் 144 ஆண்டு கால பழமையான டென்னிஸ் தொடர் களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது தொடக்க சுற்று ஆட்டங்கள் (நியூயார்க் - அமெ ரிக்கா) நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி செவ்வாய்க் கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் இல்லாத அமெரிக்க வீரரான ரெல்லியை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக் கம் முதலே நிதான அதிரடியுடன் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவில் ரஷ்ய வீரர்கள் ரப்லவ், காச்சாநோவ் மற்றும் நார்வேயின் ரூத், டென்மார்க்கின் ரூனே, அமெரிக்காவின் தியோபோ, கனடாவின் தியாலோ உள்ளிட்ட முன் னணி வீரர்கள் 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
டென்னிஸ் உலகின் முக்கிய நட்சத்திர வீரா ங்கனைகளில் ஒருவரான வீனஸ் வில்லியம்ஸ் (செரினா வில்லி யம்ஸ் சகோதரி) நீண்ட காலத்தி ற்கு பிறகு வைல்ட் கார்டு வாய்ப்பு (சிறப்பு அனுமதி) மூலம் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் களமிறங்கினார். இத்தகைய சூழலில் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் இல்லாமல் களமிறங்கிய வீனஸ் வில்லியம்ஸ், தரவரிசை யில் 11ஆவது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோ லினா முச்சோவாவை எதிர்கொண் டார். வெற்றிக்காக கடினமாக போராடிய வீனஸ் வில்லியம்ஸ் 3-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியே றினார். 45 வயதான வீனஸ் வில்லி யம்ஸ் 2000 மற்றும் 2001 அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் போலந்தின் பிரெச், கிரீஸின் சக்கரி, ஆஸ்திரே லியாவின் கசட்கினா, ரஷ்யாவின் ஆண்ட்ரீவா ஆகியோரும் 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ரஷ்யாவின் கசட்கினா இனி ஆஸி., குடிமகள்
உக்ரைன் - ரஷ்யா போர் காரண மாக, டென்னிஸ் உலகில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் (ரஷ்யா ஆதரவு நாடு) நாடுகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றன. அதாவது நாட்டின் பெயர் மற்றும் கொடி கள் இல்லாமல் விளையாடி வரு கின்றனர். இதனால் ரஷ்யா வீராங்கனை கள் வேறு நாட்டிற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ரஷ்ய இளம் வீராங்கனை ரை பகினா கஜகஸ்தான் நாட்டிற்கு இடம்பெயர் ந்து, அந்நாட்டு குடிமகளாக மாறினார். தற்போது ரஷ்யாவின் கசட்கினாவும் ஆஸ்தி ரேலிய குடிமகளாக அமெரிக்க ஓபனில் விளையாடி வருகிறார்.
பிரீமியர் லீக் தொடரில் மிக இளம் வயதில் கோல் லிவர்பூல் வீரர் சாதனை
இங்கிலாந்து நாட்டில் பிரபல மற்றும் முக்கிய கால்பந்து தொடராக இருப்பது பிரீமியர் லீக் தொடராகும். இந்த தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை நடைபெற்ற போட்டி ஒன்றில் லிவர்பூல் - நியூகேஸ்டல் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 35 மற்றும் 46ஆவது நிமிடங்களில் லிவர்பூல் அணியினர் கோல் அடிக்க, இரண்டாம் பாதியில் திடீரென மீண்டெழுந்த நியூகேஸ்டல் அணியினர் 57 மற்றும் 88ஆவது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனில் இருந்தன. இதனையடுத்து கூடுதல் நிமிடம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தின் 96ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய 16 வயதேயான லிவர்பூல் வீரர் ரியோ குமோகா 100ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த கோல் மூலம் லிவர்பூல் அணி 3-2 என வென்றது. அதிவிரைவாக கோலடித்த ரியோ குமோகா ஒரே நாளில் 2 சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதில் பிரீமியர் லீக் வரலாற்றில் களமிறங்கிய 4-ஆவது இளம் வீரர் மற்றும் லிவர்பூல் அணியில் முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.